Home » » காதல் நடிப்போடு குறும்பு கொப்பளிக்க வேடிக்கையாக நடித்துள்ளேன்;அமலா பால்

காதல் நடிப்போடு குறும்பு கொப்பளிக்க வேடிக்கையாக நடித்துள்ளேன்;அமலா பால்

Written By edupudi on Jan 10, 2012 | 10:15 AM

தமிழ் திரையுலகில் மைனா நாயகி அமலா பால் தான் நடித்த திரைப்படங்கள் வெற்றி அடையுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நடித்த அமலாபால் தற்போது தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து நடித்துள்ளார்.


வேட்டை படத்தில் நாயகன் ஆர்யா உடன், முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நாயகன் அதர்வா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நாயகன் சித்தார்த் என முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த படங்களின் வெற்றிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தமிழ் படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பொங்கலுக்கு நான் நடித்த வேட்டை திரைப்படம் வெளியான பிறகே மற்ற பட வாய்ப்புகளை ஒப்புக்கொள்வேன்.

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நாயகன் சித்தார்த் உடன் இணைந்து நடித்துள்ளேன். இந்த படத்தில் முற்றிலும் புதுவிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன். காதல் நடிப்போடு குறும்பு கொப்பளிக்க வேடிக்கையாக நடித்துள்ளேன் என்று அமலா பால் கூறியுள்ளார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger