டென்மார்க்கின் அரச திணைக்களங்கள், நகரசபைகள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் துப்பரவு தொழிலார்கள் அடிமைகள் போலவும், மனிதத் தன்மையற்ற முறையிலும் நடாத்தப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துப்பரவு தொழில்களை செய்யும் முகவர்களாக தொழிற்படுவோரிடம் அடிமாட்டு விலைக்கு ஓடர்களை இவர்கள் கோருகிறார்கள். இதன் காரணமாக மலிந்த விலையில் மாடாக முறிய வேண்டிய அவலத்தை தொழிலாளர் சந்திக்கிறார்கள். இது முற்றிலும் பொறுப்பற்ற செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் சம்பளப்பண ஏமாற்று, ஓய்வூதிய பணத்தை கட்டுவதில் ஏமாற்றென ஒது தொகை ஏமாற்றுக்கள் வலை விரித்துள்ளதால் ஒவ்வொரு தொழிலாளரும் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தொடர்ந்து செய்திகள் வலியுறுத்தி வருகின்றன. இது இவ்விதமிருக்க நேற்று முன்தினம் வெளியான அறிக்கையொன்று டென்மார்க்கில் அதிகமாக இருக்கும் வெளிநாட்டவர் துருக்கியரே என்று தெரிவிக்கிறது. டென்மார்க்கின் மொத்த சனத்தொகையில் துருக்கியர்கள் 1.1 வீதம் இடம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள். அதேவேளை மேலை நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர் சென்ற ஆண்;டு மட்டும் 32.000 பேர் வந்துள்ளதாகவும், 2010 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 1600 பேர் அதிகமாகும். அதேவேளை மேலை நாடுகள் அல்லாதவர்களின் தொகை சென்ற ஆண்டு 16.500 பேர் வீழ்ச்சி கண்டுள்ளது.
மறுபுறம் வெளிநாட்டு பின்னணி கொண்ட சிறுபிள்ளைகளை டென்மார்க் வரவழைப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய சட்ட மூலத்தில் ஆறு வயதாக இருந்த கட்டுப்பாடு எட்டு வயதாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு என்கில்ஸ் லிஸ்ற், லிபரல் அலையன்ச இதில் கையொப்பமிட்டுள்ளன. எட்டு வயதுவரை பிள்ளைகள் இணைவாக்கமடையும் வேகம் விரைவாக இருக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஆகவே ஆறு வயதிற்கு பின் பிள்ளைகளால் இணைவாக்கமடைய முடியுமா என்று ஆராயும் அரசு இனி எட்டு வயதுக்கு பின்னரே ஆராயும்.

0 கருத்துரைகள்:
Post a Comment