Home » » சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களுக்கு அல்-கைதா ஆதரவு

சிரியாவின் அரச எதிர்ப்பாளர்களுக்கு அல்-கைதா ஆதரவு

Written By edupudi on Feb 13, 2012 | 9:32 AM

சிரியாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிக்கு அல்கைதாவின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
வீடியோ செய்தி ஒன்றில் உரையாற்றியுள்ள அவர், சிரியாவில் உள்ள எதிர்த்தரப்பினர் மேற்கு நாடுகளிலோ அல்லது ஏனைய அரபு நாடுகளிலோ உதவிக்கு தங்கியிருக்கவில்லை என்று கூறியுள்ளார்.

சுதந்திரமான சிரியாவின் மக்களை மூழ்கடித்துள்ள ஒரு புற்றுநோய் பிடித்த ஆட்சியாக சிரியாவின் ஆட்சியை விபரித்துள்ள அவர், முஸ்லிம்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதனைத் தாம் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.
இராக்கில் இருந்து சிரியாவுக்குள் இஸ்லாமிய தீவிரவாதிகள் சென்றுள்ளதாக செய்திகள் சில கூறுகின்றன.

சிரியாவில் அண்மையில் நடந்த சில குண்டுத் தாக்குதல்கள் அல்-கைதாவினால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.


கண்காணிப்புக்குழு தலைவர் இராஜினாமா

மோதல்கள்  தொடர்கின்றன


இதற்கிடையில், சிரியாவில் உள்ள அரபு லீக்கின் கண்காணிப்புக் குழுவின் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
சிரியாவில் ஐநாவுடன் இணைந்து ஒரு கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அரபு லீக் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் ஜெனரல் முகமட் அல் டாபி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அரபு லீக்கின் சிரியாவுக்கான புதிய தூதுவராக ஜோர்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான அப்தல் இலா கதீப் பிரேரிக்கப்பட்டுள்ளார்.
சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான கிளர்ச்சியை வன்முறை கொண்டு அடக்கு அரசாங்க நடவடிக்கை தொடரும் நிலையில், கடந்த மாதம் அரபு லீக் தனது கண்காணிப்புக் குழுவை வாபஸ் பெற்றிருந்தது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger