Home » » ஒரு விபச்சாரியின் கண்ணீர்க் கதை!

ஒரு விபச்சாரியின் கண்ணீர்க் கதை!

Written By edupudi on Dec 5, 2011 | 2:18 PM


பத்திரம்

கிடையாது. தேசிய அடையாள அட்டையும் கிடையாது.

எங்கு பிறந்தார்? பெற்றோர் யார்? சொந்தப் பெயர் என்ன? என்பனவெல்லாம் தெரியாது.


தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளை சரளமாக பேசுகின்றார். பிறப்பால் தமிழர் என்று எண்ணுகின்றார். ஏனெனில் தமிழை மிக நன்றாக பேசுகின்றார். ஆனால் உறுதிப்படுத்த வழி இல்லை.


மேரிக்கு சில சம்பவங்கள் நினைவில் உள்ளன. 10, 12 வயதாக இருந்தபோது பங்களா ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து இருக்கின்றார்.

ஆனால் சில மாதங்களுக்கு இடையில் பூப்படைந்து விட்டார். வீட்டு எஜமானி அம்மா இவரை மோசமாக நட்த்தலானார். போதிய அளவு உணவு கொடுக்க மாட்டார். எனவே இவர் வீட்டில் திருடிச் சாப்பிடலானார். இதை அறிந்த எஜமானி அம்மா ஒவ்வொரு நாளும் அடி, உதை கொடுத்தார். தண்டித்தார். இதனால் பங்களாவை விட்டு வெளியேற தீர்மானித்தார் மேரி.

இதை சொல்லும் போது மேரியின் கண்கள் பனித்தன. கதறி அழுதார். ஆங்கிலத்தில் பேட்டியைத் தொடர்ந்தார்.


பங்களாவில் இருந்து வெளியேற மாலை 6.00 மணி அளவில் பஸ் நிலையம் ஒன்றின் முன்னால் இரக்கம் அற்ற மனிதன் ஒருவரை சந்தித்தார். இவருக்கு கிட்ட வந்து மிகவும் குழைவாக பேசினான் இந்த மனிதன். இந்த மனிதனை இன்று மேரிக்கு நினைவு இல்லை.

கொழும்பில் வேலை பெற்றுத் தருவான் என்று வாக்குறுதி வழங்கினான். பஸ் ஒன்றில் அழைத்துச் சென்றான். ஒரு மணி நேர பயணத்தைத் தொடர்ந்து பஸ்ஸை விட்டு இறங்கிய பின்னர் சிறிய அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்றான். அப்போது நேரம் இரவு 8.00 மணி.
கொஞ்சம் உணவு கொடுத்தான். பின்னர் இம்மனிதனின் போக்கு மாறி விட்ட்து. அந்த இரவில் மூன்று தடவைகள் பலாத்காரமாக மேரியை புணர்ந்தான். அடுத்த நாள் காலை கொழும்புக்கு அழைத்துச் சென்றான்.
ஒரு இட்த்துக்கு கூட்டிச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான். இங்கு வேலை கிடைக்கும் என்று சொல்லி இருக்கின்றான். இந்த இட்த்தைச் சேர்ந்தவர்கள் மேரிக்கு புத்தாடை, சவர்க்காரம், முகப் பூச்சு, வாசனைப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்தனர்.

மேரிக்கு ரொம்ப மகிழ்ச்சி. இங்கேயே தங்கினாள். ஆனால் ஓரிரு நாட்களின் பின் இது ஒரு விபச்சார விடுதி என்று அறிந்து கொண்டாள்.

ஆனால் இந்த இட்த்தை விட்டால் வேறு எங்கும் செல்ல இவளுக்கு வழி இருக்கவில்லை. இவளும் ஒரு விபச்சாரி ஆனாள். மிகவும் சின்ன வயதிலேயே பாலியல் தொழிலாளி ஆனாள். இங்கு சில வருடங்கள் இருந்தாள். வாடிக்கையாளர்களின் உதவியுடன் சில நேரங்களில் இடம் மாறியும் உள்ளாள்.

கொழும்பின் எல்லா இடங்களிலும் உள்ள விபச்சார விடுதிகளிலும் வேலை பார்த்து உள்ளாள். பல தடவைகள் பொலிஸில் பிடிபட்டு இருக்கின்றாள். எந்த எந்த பொலிஸார் பிடித்தனர் என்றெல்லாம் நினைவு இல்லை. ஆனால் 15 தடவைகள் வரை பிடிபட்டு இருக்கின்றார்.

இவரின் பிந்திய இருபதுகளில் வெளிநாட்டு வாடிக்கையாளர் ஒருவர் அறிமுகம் ஆனார். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் சிறந்த ஹோட்டல்களில் தங்கினார். இவ்வாடிக்கையாளர்களிடம் இருந்துதான் ஆங்கிலம் கற்றார். நிறைய பணமும் சம்பாதித்தார்.
ஆனால் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற ஆவணங்கள், நிரந்தர முகவரி போன்றன இல்லாத்தால் இவரால் வங்கிக் கணக்கை திறக்க முடியவில்லை.
இவரது எல்லாப் பணமும் சிகரெட்டு, மதுபானம் என்று கரைந்து போனது. பணத்தை சேமிக்கவே இல்லை. இவர் தேசிய அடையாள அட்டை ஒன்றை பெறுகின்றமைக்கு பகீரத முயற்சிகள் செய்தார். வெறும் அலைச்சல் மாத்திரமே மிச்சம்.

இப்போது இவரின் இளமை போய் விட்ட்து. ஆனால் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இளம் யுவதிகள்தான் வேண்டும். எனவே விபச்சாரி நண்பி இன்னொருத்தியுடன் சேர்ந்து தொழிலை இப்போது நட்த்துகின்றார். இரவு நேரங்களில் வாடிக்கையாளர்களுக்காக வீதிகளில் காத்திருக்கின்றார்.

வயதாகி விட்ட்தால் விபச்சார விடுதிகளில் வேலை செய்ய முடியாது உள்ளது. வீதிகளில் நெடுநேரம் காத்திருக்கின்றமையும், பொலிஸாரை கண்டால் ஒளிகின்றமையும் இவரின் வயதுக்கு மிகவும் கடினமான வேலைகள் என்கின்றார்.

இரு வருடங்களுக்கு முன்னர் தங்குமிடம் தேடி அலைந்தார் மேரி. ஆனால் ஒரு இடமும் கிடைக்கவில்லை. வீதியில் அறிமுகமான விபச்சாரி நண்பி ஒருவரின் உதவியுடன் பம்பலப்பிட்டி கடலோரத்தில் விபச்சாரிகள் தங்குகின்ற குடில் ஒன்றில் இவருக்கு இடம் கிடைத்தது.

இந்த பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ளது. இங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றமை மூலம் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது சாப்பிட இவரால் முடிகின்றது. ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றார். ஆனால் அண்மைய நாட்களில் இவருக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றமை குதிரைக் கொம்பாக உள்ளது.

ஆனால் இங்கு இவருக்கு ஒரு அதிஷ்டம் கிடைத்த்து என்கிறார். ஒரு நல்ல மனிதனை இங்கு சந்தித்து இருக்கின்றார். இம்மனிதன் அன்பாக நடக்கின்றார் என்கின்றார். இம்மனிதனை கணவனாக மதிக்கின்றார் என்கின்றார். கடந்த இரு வருடங்களாக சேர்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் சட்ட ரீதியாக திருமணம் செய்தவர்கள் அல்லர். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்கின்றார். எனது ஆரம்ப வாழ்க்கையில் என் மீது அன்பு காட்ட யாரும் இருக்கவில்லை, இப்போது இவ்ர் அன்பு காட்டுகின்றார், இவர் என் கணவன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார் மேரி.

இம்மனிதனுக்கு வயது 43. தென்னிலங்கையை சேர்ந்தவர். முன்னாள் இராணுவ வீரர். இப்போது வேலை இல்லை. பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

பாலியல் தொழிலை இம்மனிதனை மேரிதான் காப்பாற்றுகின்றார். ஆனால் மேரி வேறு தொழிலுக்கு செல்ல வேண்டும், பணத்துக்காக செக்ஸ் செய்ய கூடாது என்பது இவரின் விருப்பம். ஆனால் இருவருக்கும் வேறு வழி கிடையாது.

ஆனால் எனக்கு விபச்சார தொழிலில்தான் அனுபவம் உள்ளது, வேறு தொழில் தெரியாது, காலத்தை இப்படியே ஓட்ட வேண்டியதுதான் என்கிறார் மேரி.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger