Home » » செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் வெளியீடு

செவ்வாய் கிரகத்தின் அரிய ஒளிப்படங்கள் வெளியீடு

Written By edupudi on Dec 6, 2011 | 7:56 AM

மார்ஸ் ரோவர் ஸ்பிரிட்(Mars Rover Spirit) என்ற விண்கலம் மூன்று மாதம் 27 நாட்களாக செவ்வாய் கிரகத்தை சுற்றி வந்து ஏறத்தாழ 3500
ஒளிப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
கடந்த 2004 ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய இந்த பயணம் 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு பெற்றது.
இந்த விண்கலத்தில் 4.8 மைல் தூர பயணத்தில் எண்ணற்ற பாறைகள் மற்றும் வெளிர் நிறமுடைய மணல் போன்றவற்றை ஆய்வு செய்து படங்களை அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது தான் இந்த விண்கலத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.
தற்பொழுது இந்த விண்கலமானது மண்ணில் புதைந்து செயலிழந்து போய்விட்டது. இரண்டு ஆண்டுகளாக இதனை மீட்டு எடுக்க முயற்சி செய்தும் நாசாவால் இயலவில்லை.
முதன் முதலில் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கிய போது 3 மாதம் மட்டுமே செயல்படும் என நாசா விஞ்ஞானிகள் கருதினர். ஆனால் இதன் இயக்கம் நீடித்தது அறிவியலின் வெற்றியாகும்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger