Home » » 'ஐஸ்' குழந்தை படத்துக்கு பல கோடி பேரம்

'ஐஸ்' குழந்தை படத்துக்கு பல கோடி பேரம்

Written By edupudi on Dec 5, 2011 | 3:18 PM

உலக அழகியான பிறகுதான் ஐஸ்வர்யாராய் கோடிகளில் சம்பாதிக்க ஆரம்பித்தார். அவரது குழந்தையோ பிறந்தவுடனே கோடிகளை சம்பாதிக்க தயாராக உள்ளது. ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் குழந்தையுடன் ஐஸ்வர்யா ராய் இருப்பதுபோன்ற மார்பிங் படம் இன்டர்நெட்டில் உலா வந்தது. அது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்று தெரிவித்தார் அமிதாப்பச்சன். இந்நிலையில், ஐஸ் குழந்தையின் போட்டோவை யார் முதலில் வெளியிடுவது என்ற போட்டி ஊடகங்கள் மத்தியில் நிலவுகிறது.

ஐஸ்வர்யா உலகப்புகழ் பெற்றவர் என்பதால், வெளிநாட்டு ஊடகங்களும் களத்தில் குதித்திருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி, குழந்தையின் போட்டோவை வெளியிட அவை பேரம் பேசிவருகின்றன. இதுவரை அமிதாப் மசியவில்லை. அதிக பணம் தரும் பெரிய மீடியாவுக்கு பேத்தி படத்தை அமிதாப் தர வாய்ப்பு இருப்பதாக பாலிவுட்டில் தகவல் பரவுகிறது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger