தற்போது வரையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 512 பேருக்கு மேல் டெங்கு நோய்க்கு உள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலதிக அவசர சிகிச்சை பெற்று அவர்கள் தேறியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த வாரம் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட பெண்மணியொருவர் மரணமானார். இது ஏறாவூரில் இந்த ஆண்டில் இடம்பெற்ற முதலாவது டெங்கு மரணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிமித்தம் ஏறாவூரில் வசித்து வந்த 38 வயதான இரத்தினபுரியைச் சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சமயம் மரணமானார்.
ஏற்கெனவே இவரும் இவரது மூன்று பிள்ளைகளும் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று சுகப்பட்டுத் திரும்பியிருந்தனர். அவ்வேளையில் தாய்க்கு இரண்டாவது தடவையாக காய்ச்சல் பீடிக்கவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் சமயம் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது அப்போது அவர் உயிழந்துள்ளார். இந்த இருதய நோய்க்கு டெங்கு காரணமாக அமைந்து விட்டிருந்தது என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்எச்எம். தாரிக் தெரிவித்தார்.
டெங்கு மூளையையும், இருதயத்தையும், ஈரலையும் பாதிப்படையச் செய்யும் என்று அவர் மேலும் விவரித்தார். இந்தப் பெண்மணிக்கு டெங்கு இருதயத்தைப் பாதித்ததன் காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளது என்று சுகாதார வைத்திய அதிகாரி சொன்னார்.

0 கருத்துரைகள்:
Post a Comment