ஒரு பெரிய தட்டில் சாப்பாட்டை பரிமாறி, அதனுடன் காய்கறி, கீரை, முட்டை போன்றவற்றை வைத்து அதையும் சாப்பிடுமாறு ஊக்கப்படுத்துங்கள்.
சாப்பிடப் பழகும் குழந்தைகள் தட்டிலிருந்து சாப்பாட்டை சிந்துவதை ஆரம்பத்தில் தடுக்க முடியாது. அவ்வாறு, சாப்பிடும் போது குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது.
கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள்.
குழந்தைகள் போதும் என்றளவிற்கு சாப்பிட்டதும் அவர்களாகப் போதும் என்று சொல்லுவார்கள். அதற்கு மேலும் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
சாப்பாட்டை அவர்கள் ருசித்துச் சாப்பிட நீங்கள் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

0 கருத்துரைகள்:
Post a Comment