நடப்பு கல்வி முறை பற்றிய பார்வை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடனான உறவு போன்றவற்றை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் முழுமையான கதையைக் கேட்டப்பிறகே இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது ஒருபுறமிருக்க, இப்படத்திற்காக மீண்டும் பழைய பாணியைப் பயன்படுத்தி அனைத்து இசைக் கலைஞர்களையும் ஸ்டூடியோவுக்கு வரவழைத்து நேரடியாக இசைக்க வைத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ் ஹீரோவாகவும் ராதிகா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களைத் தவிர தலைவாசல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபுதேவா நட்புக்காக சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment