அண்மையில் மலேசியா பேரா, தஞ்சோங் மாலிமில் அமைந்துள்ள UPSI ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் 70 மாணவர்களை உள்ளடக்கி நடைபெற்ற சட்டவிரோத பேரணி குறித்த விசாரணை அறிக்கை கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதாக பேரா மாநில போலீஸ் படைத் தலைவர் முகமது சுக்ரி டாஹ்லான் தெரிவித்தார்.
அந்த பேரணியின் போது போலீசார் மாணவர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது,. ஆனாலும், அவர்கள் கடுமையாக நடந்துக்கொள்ளவில்லை என்பதற்குச் சான்றாக போலீசாரிடம் வீடியோ படக்காட்சி உள்ளதாகவும் முகமது சுக்ரி தெரிவித்தார்.
பலகோணங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலிருந்து இந்த அறிக்கைத் தயார்நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
“இந்த சட்டவிரோத பேரணியில் சம்பந்தப்பட்ட சில மாணவர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரணை அறிக்கையில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


0 கருத்துரைகள்:
Post a Comment