Home » » ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தமிழ் மக்கள் கையில் ?

ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தமிழ் மக்கள் கையில் ?

Written By edupudi on Jan 12, 2012 | 10:19 AM

விடுதலை புலிகளின் சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு நாடுகளில் ஆதரவு இருக்கிறது என்று இலங்கை அரசு குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் ராணுவ அமைச்சர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது:
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல அரசியல் தலைவர்களிடம் உலக தமிழர் அமைப்புகள் செல்வாக்கு பெற்றுள்ளன. ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா ஆகிய நாடுகளிலும் செல் வாக்கு பெறுவதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர்களின் பிரிவினைவாதத்துக்கு ஆதரவு பெற்றுள்ளனர்.

உலக அளவில் பொது அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கூட விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்புகளின் செயலால் இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் தேர்தல் தொடர்பான அரசியல் காரணமாக விடுதலை புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள் வலிமையாக உள்ளன.

உள்நாட்டு அரசியலில் ஏற்படக்கூடிய விளைவுகளை மனதில் கொண்டு அந்த நாடுகளின் அரசுகள் இந்த விஷயத்தில் தங்கள் நிலையை எடுக்கின்றன. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் அதிகளவில் குடிபெயர்ந்த தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்கள் கணிசமான ஓட்டுகளை வைத்திருப்பதால் அந்நாடுகளில் பலமிக்கவர்களாக உள்ளனர். இலங்கையில் விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்டு விட்டாலும், வெளிநாடுகளில் செயல்படும் விடுதலை புலிகள் தொடர்புடைய அமைப்புகள் இலங்கையை பிரித்து தனிநாடு ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்றன. இவ்வாறு கோத்தபய ராஜபக்சே பேசினார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger