Home » » இதய நோயாளிகளே நீங்கள் இப்படித்தான் உணவு சாப்பிட வேண்டும்

இதய நோயாளிகளே நீங்கள் இப்படித்தான் உணவு சாப்பிட வேண்டும்

Written By edupudi on Jan 8, 2012 | 9:16 PM

 உணவே மருந்து..மருந்தே உணவு என்பது நம் முன்னோர்களின் உண்மை வாக்கு. இதை நாம் மறந்ததால் தான் ஆரோக்கியத்தை இழந்தோம் பல நோய்களால் பாதிக்கப்படுகிறோம்.
 நம்மைத் தாக்கும் நோய்களுக்கு அடிப்படை நமது எண்ணமும் உண்ணும் உணவும்தான். என்ன சாப்பிடலாம், எப்படிச் சாப்பிடலாம் என்பது நமக்கு தெரிந்திருக்க வேண்டும். நோயாளிகளுக்கு மருந்து பாதி, உணவு பாதி, இரண்டும் சேர்த்துத்தான் நோயைக் குணமாக்கும். அவ்வகையில் தற்போது பரவலாகக் காணப்படும் நோய்களில் இருதய நோயும் ஒன்று.
 
நோய் வருமுன் நம் ஆரோக்கியத்தைக் காக்க ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வு தேவை. இருந்தாலும் நோய் வந்த பிறகும் மனம் நொந்துவிடாமல் உணவு வகைகளால் நோய் முற்றி விடாமல் நம் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கலாம். `விருந்தும் வேண்டாம், விரதமும் வேண்டாம்'.


இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு அட்டவணை இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது:


இதய நோயாளிகளுக்கான உணவு (1500 கலோரிகள்) உப்பு 2 லிருந்து 3 கிராம் வரை குறைந்த அளவு கொழுப்பு - 15 கிராம் வரை

சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு அதிகாலை ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது  தேநீர் ஒரு கப்.

காலை உணவு: இரண்டு இட்லிகள் சாம்பாருடன் அல்லது இடியாப்பம் இரண்டு, அல்லது கார்ன் ஃபிளேக்ஸ் அல்லது ஓட்ஸ் கஞ்சி.

இடைப்பட்ட நேரம்: மோர் அல்லது காய்கறி சூப் அல்லது ஜூஸ்.

மதிய உணவு: நன்றாகக் குழைந்த சாதம், சாம்பார் அல்லது பருப்புடன். காய்கறி இரண்டு வகைகள், தயிர் அல்லது மோர், ஜெல்லி கலந்த பழ சாலட் அல்லது ஏதாவது ஒரு பழம்.

மாலை: அதிக நீர் கலந்த தேநீர் அல்லது ஆடை எடுக்கப்பட்ட பால் ஒரு கப், பிஸ்கட், சுண்டல் அல்லது காய்கறி கலந்த சாண்ட்விச் இரண்டு.

இரவு சாப்பாடு: எண்ணெய் விடாத சப்பாத்தி இரண்டு, காய்கறிக் கூட்டு, பருப்பு, மோர்.

படுக்கச் செல்லுமுன்: ஆடை எடுக்கப்பட்ட பால்.


அசைவ உணவு உட்கொள்பவர்களுக்கு:

காலை:

ஆடை எடுக்கப்பட்ட பாலுடன் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ளலாம். அத்துடன் ஒரு அவித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்துக் கொள்ளலாம்.

இடைப்பட்ட நேரம்:

கொழுப்பில்லாத இறைச்சி சூப் அல்லது கோழி சூப் அருந்தலாம்.

மதியம்:

உணவுடன் கோழிக்கறித் துண்டு இரண்டு அல்லது மீன்கறித் துண்டுகள் இரண்டைச் சேர்த்துக் கொள்ளலாம்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger