Home » » நீங்கள் சிலிம் ஆகனுமா இந்த உணவுகளை குறையுங்கள்

நீங்கள் சிலிம் ஆகனுமா இந்த உணவுகளை குறையுங்கள்

Written By edupudi on Jan 8, 2012 | 9:21 PM

உடல் பருமன் நோய் தற்போது உலகளாவிய பிரச்சனையாகிவிட்டது. உடல்பருமன் பல நோய்களுக்கு வித்திடும் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், நம்மில் பலர் உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்பதற்காக அவர்களை அறியாமலேயே உடல் பருமனுக்கு வித்திடும் உணவுகளைச் சாப்பிடுவதாக மருத்துவ நிபுணர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு நம்மை அறியாமல் நாமே உடல் எடையைக் கூட்டக்கூடிய உணவுகளை உண்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

பால்:

உங்களது அன்றாட உணவு பட்டியலில் பாலையும் சேர்த்துக் கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்றாலும், அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாலை அதிக அளவில் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.சிலர் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் பால் அருந்துவது வழக்கம்.வேறு சிலர் காலை உணவுக்கு பின்னரோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு பின்னரோ பால் அருந்துவது வழக்கம்.இத்தகைய பழக்கம் உடையவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்காவது அப்பழக்கத்தை நிறுத்தி பார்த்தால் மந்த நிலை அகன்று, உடல் எடையும் குறைந்து,மேனியும் தூய்மையாகி வித்தியாசமான மாற்றத்தை உணரலாம்.இத்தகைய மாற்றங்கள் உங்களது பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்.

சாப்பாட்டுக்கு பின் இனிப்பு:

நம்மில் பலருக்கு சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் ஒரு கடலை மிட்டாயையாவது சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.இவ்வாறு சாப்பாட்டுக்கு பின்னர் ஸ்வீட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் முற்றிலும் அநாவசியமான ஒன்று என்பதே நிபுணர்களின் வாதம்.எடுத்துக்கொள்ளும் உணவே சர்க்கரை சத்தாகத்தான்-குளுகோஸ்- மாற்றம்பெற்று உடலுக்கு தேவையான சக்தியை அளிக்க தொடங்குகிறது.அப்படி இருக்கையில் மேலும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவை கூட்டுவது உடல் எடையை அதிகரிக்கத்தான் வழி வகுக்கும்.எனவே அந்த பழக்கத்தை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு கைவிட்டு பார்த்தாலே அதன் பலனை உணர்ந்து, நீங்கள அப்பழக்கத்தை அடியோடு தலைமுழுகி விடுவீர்கள்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger