Home » » சாப்பிடும்போது தண்ணீர் அருந்த வேண்டாம்

சாப்பிடும்போது தண்ணீர் அருந்த வேண்டாம்

Written By edupudi on Jan 8, 2012 | 9:27 PM

பலர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.
இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
மேலும்  சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவதால் ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாக உணர்வை வைத்து அறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, சுற்றுபுற சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரை அருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், அந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என பிரபல டயட்டீஷியன் ஷோனாலி ஆதங்கப்படுகிறார்.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் பேர்வழிகள்தான் என்கிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில குறிப்புகள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger