Home » » நியூசிலாந்தில் புயலில் சிக்கிய கப்பல் 2 துண்டாக உடைந்தது

நியூசிலாந்தில் புயலில் சிக்கிய கப்பல் 2 துண்டாக உடைந்தது

Written By edupudi on Jan 8, 2012 | 9:58 PM

நியூசிலாந்தில் புயலில் சிக்கிய கப்பல் 2 துண்டாக உடைந்ததுகிரீஸ் நாட்டைச் சேர்ந்த ரீனா என்ற சரக்கு கப்பல் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள தரங்கா என்ற இடத்தில் கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி தரை தட்டியது. அதில் கச்சா எண்ணை உள்ளிட்டவை இருந்தன.
 
இந்த நிலையில், சமீபத்தில் அங்கு கடும் புயல் வீசியது. இதனால் 6 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. அவை கப்பலை அதி பயங்கரமாக தாக்கியது. அதில் கப்பல் 2 துண்டுகளாக உடைந்து பிளந்தது.  
 
கப்பல் உடைந்ததால் அதில் இருந்த கச்சா எண்ணை கடலில் கலந்தது. அதில் சிக்கி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்பறவைகள் இறந்தன. புயல் தாக்க தொடங்கியதும் கப்பலில் இருந்து 1100 டன் கச்சா எண்ணை இறக்கப்பட்டது. 385 டன் எண்ணை மட்டுமே கப்பலில் இருந்தது.
 
தற்போது கப்பல் 20 முதல் 30 மீட்டர் அளவாக 2 ஆக உடைந்துள்ளதாக நியூசிலாந்து கப்பல் துறை செய்தி தொடர்பாளர் ரோஸ் ஹென்டர்சன் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger