சமீபத்தில் இஷ்டம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது.
இத்திரைப்படத்தில் விமல் கதாநாயகனாகவும், இஷா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இதுபற்றி விமல் கூறுகையில், சமீபத்தில் இஷ்டம் திரைப்படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் சில காட்சிகள் சுவிட்சர்லாந்தில் எடுக்கப்பட்டது.
அங்க எடுத்த ஒரு காட்சியில் நடிகை இஷா அகர்வாலுடன் நெருங்கி நடிக்கும் அவசியம் ஏற்பட்டது.
இஷா அகர்வால் இதை எதார்த்தமாக எடுத்துக் கொண்டார், ஆனால் எனக்கு பயங்கர படபடப்பாக இருந்தது.
இதனால் 10 டேக் எடுக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட என் நண்பர்கள் என்னை மிகவும் கேலி செய்கிறார்கள் என்று கூறினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment