முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத் துக்கு உட்பட்ட திருமுறிகண்டிப் பகுதி யின் ஒரு பகுதி மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காததுடன் அந்தப் பகுதிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் பகுதியில் மீளக்குடியமர வேண்டிய 46 குடும்பங்கள் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திலும் ஏனைய 69 குடும்பங்கள் உறவினர் வீடுகளிலும் தங்கி வாழ்ந்து வருகின்றன. இந்த 115 குடும்பங்களும் தமது சொந்த இடங்களிலே மீளக் குடியமர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.
மேலும் பிறிதொரு இடத்தில் இந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறு காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு இடங்களில் தமக்கு காணி வழங்கவேண்டிய தேவையில்லையெனவும் தமது காணிகளையே தமக்கு வழங்க வேண்டுமெனவும் கோரும் மனுவொன் றைக் கடந்த வாரம் கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இவர்கள் வழங்கியுள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment