Home » » பஸ் டிக்கட்டுக்குப் பதிலாக ரீலோட் அட்டை

பஸ் டிக்கட்டுக்குப் பதிலாக ரீலோட் அட்டை

Written By edupudi on Jan 4, 2012 | 10:30 AM

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களில் டிக்கட் வழங்கும் முறையை நிறுத்தி ரீலோட் அட்டை (Reloard Card)  வழங்கும் முறையொன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க உள்ளதாக இ.போ.ச தலைவர் எம்.டி. பந்துசேன தெரிவித்தார்.

தெற்கு நெடுஞ்சாலையினூடாக புதிய இ. போ. ச பஸ்களை சேவையில் ஈடுபடுத்தும் வைபவம் நேற்று மகரகம பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இரண்டு இ. போ. ச. அதி சொகுசு பஸ்களை அதிவேக நெடுஞ்சாலையில் ஈடுபடுத்த அனுமதி பெற்றுள்ளோம். தேவைப்பட்டால் மேலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவோம். நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப இ. போ. ச வில் பல புதிய மாற்றங்களை செய்து வருகிறோம். பஸ்களில் ஒன்லைன் ஊடாக ஆசன பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் குமார வெல்கமவின் ஆலோசனைப் படி டிக்கட்டுக்குப் பதிலாக ரீலோட் அட்டை வழங்கும் புதிய முறையை விரைவில் கொண்டுவர உள்ளோம். இணையமூலம் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இ. போ. ச பஸ்களின் தொகையை ஏழாயிரமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். சேவை அடிப்படையில் இ. போ. ச இயங்குகிறது. புதிய அதி சொகுசு பஸ் சேவை மகரகம பஸ் தரிப்பிடத்தில் இருந்து காலி பஸ் தரிப்பிடம் வரை தினமும் இடம்பெறும் என்றார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger