Home » » கோச்சடையானில் ரஜினி ஜோடியாக கத்ரீனா கைஃப்

கோச்சடையானில் ரஜினி ஜோடியாக கத்ரீனா கைஃப்

Written By edupudi on Jan 12, 2012 | 9:54 AM

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கத்ரீன கைஃப் நடிக்கவுள்ளார் என செளந்தர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கோச்சடையான் படத்தில் யார் ஹீரோயின் என பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அனுஷ்கா, தீபிகா படுகோன், வித்யா பாலன் என பலரையும் ஜோடியாக்கிப் பார்த்து எதுவும் ஒத்துவராத நிலையில் தற்போது கத்ரீனா கைஃப் தேர்வாகியுள்ளார்.
“கோச்சடையான் படத்தின் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை சந்தித்துப் பேசிய போது ரஜினி படத்தில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். இப்படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார்” என செளந்தர்யா தெரிவித்தார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger