Home » , » தந்தையின் தொழிலை வாழ வைத்த தனயன் கைது

தந்தையின் தொழிலை வாழ வைத்த தனயன் கைது

Written By edupudi on Jan 10, 2012 | 10:02 AM

தந்தையின் போதைப் பொருள் கடத்தல் தொழிலை வாழ வைக்க முயன்ற 23 மகன் சென்னையில் RM3 லட்சம் மதிப்புள்ள அந்த சட்டவிரோத பொருளுடன் கைதுசெய்யப்பட்டான்.
சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் Ephedrine வகை போதைப் பொருளை சென்னை ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்கு அனுப்பி வைக்க தமது சகாக்களுக்காக காத்திருந்தபோது போலீசார் அவனைக் கைது செய்தனர். அந்த போதைப்பொருள் மலேசியர் ஒருவருக்கு விற்கப்பட இருந்தது, தெரியவந்துள்ளது. அவனது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பிரபல பொறியியல் கல்லூரியில் டிப்ளோமா படிப்பை முடித்துள்ள அந்த இளைஞர், தந்தையின் போதைப்பொருள் கடத்தல் தொழிலை பின்பற்றி வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளதாக இந்திய உளவுப் பிரிவு இயக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு அந்த இளைஞரின் தந்தை மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார். பின்பு அவர் உயிரிழந்து விட்டார்.
“தற்போது அவரது மகன் சிறிய அளவில் Ephedrine வகை போதைப் பொருளை கூரியர் மூலம் விநியோகம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான்” என பிரபல இந்திய உளவுப் பிரிவின் இயக்குனர் தெரிவித்தார்.
அதிகாரிகளை ஏமாற்றும் முயற்சியாக, அந்த ஆடவர் 20-லிருந்து 25 வயதுக்குட்பட்ட தனது சகாக்களை ரயில் மூலம் மும்பைக்கு அனுப்பி அந்த போதைப் பொருளை பெற்றுக்கொள்ள அனுப்பியுள்ளான். ஆயினும், உளவுப் பிரிவினர் அவ்விருவரும் மும்பைக்குச் செல்லும் வரை பின் தொடர்ந்து, மீண்டும் போதைப் பொருளோடு சென்னைக்கு வந்துக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger