Home » » சொந்தப் பிள்ளைகளை விலங்குபோல் நடத்திய கொடூர தந்தை

சொந்தப் பிள்ளைகளை விலங்குபோல் நடத்திய கொடூர தந்தை

Written By edupudi on Dec 30, 2011 | 1:55 PM

சொந்த தந்தையே தமது இரண்டு குழந்தைகளை விலங்குபோல் நடத்திய கொடூரம் மலேசியாவில்  நிகழ்ந்துள்ளது. 


தனது சின்னஞ்சிறு குழந்தைகளைக் கொஞ்சமும் ஈவிரக்கமின்றி கால்களைச் சங்கிலியால் பிணைத்து ஆறுமணி நேரம் அழுக்கான கழிப்பறையினுள் அடைத்து வைத்துள்ளார். 

இச்சம்பவம் மலேசியாவில் உள்ள  தாமான் மாவார், ராஜா ஊடாவில் நேற்று முன் தினம் நிகழ்ந்தது. 40 வயதான அந்த ஆடவர் பிற்பகல் மூன்று மணியளவில் வேலைக்குச் செல்லும் முன் தமது ஆறு வயதான பெண் பிள்ளையையும் இரண்டு வயதான ஆண் குழந்தையையும் சங்கிலியால் பிணைத்து கழிப்பறைக்குள் வைத்து பூட்டி வைத்துச் சென்றுள்ளார்.

தம் பிள்ளைகள் மிகவும் அட்டகாசம் செய்வதாலும் அவர்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத காரணத்தாலும் அந்த படுபாதக செயலைப் புரிந்ததாகக் கூறியுள்ளார். 

தாய்லாந்து நாட்டுக்காரரான தம் மனைவி ஒரு மாதத்திற்கு முன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்த இரு பிள்ளைகளும் உதவிக் கோரி சத்தம் போட்டதைத் தொடர்ந்து அண்டைவீட்டுக்காரர் தங்களைத் தொடர்பு கொண்டதாக வடக்கு செபெராங் பிறை போலீஸ் படைத் தலைவர், சுல்கிப்ளி அலியாஸ் தெரிவித்தார்.
அண்டை வீட்டுக்காரர் காவல்துறைக்கு இரவு 8 மணியளவில் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, போலீசாரும் சமூகநல  இலாகா அதிகாரிகளும் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு  விரைந்ததாக அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்த இரு சிறுவர்களும் தற்போது செபராங் பிறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவர்களின் தந்தை நேற்று தொடங்கி 4 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுல்கிப்ளி அலியாஸ் தெரிவித்தார்.

அக்குழந்தைகளை மீட்ட போது, அவர்களிருவரும் பரிதாபகரமான நிலையில் மிகுந்த பசியோடு காணப்பட்டதாக அண்டை வீட்டுக்காரர் தெரிவித்தார். “நாங்கள் அவர்களுக்குச் சாப்பிட ரொட்டி கொடுத்தபோது அதனை வாங்கி ஆர்வத்துடன் உண்டனர். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த இரு குழந்தைகளும் அசுத்தமான கழிப்பறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளதோடு அந்த ஆண் குழந்தை கால் சட்டை கூட அணிந்திருக்கவில்லை” என அந்த அண்டை வீட்டுக்காரர் தெரிவித்தார்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger