முன்னதாக, நேற்றிரவு 9 மணியளவில் முல்லைத்தீவை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் கடல் நீர் திடீரென பெருக்கெடுக்கத் தொடங்கியது. இதனால் சுனாமி வந்துவிட்டதாக மக்கள் பீதியுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
ஏறக்குறைய முழங்கால் அளவுக்கு உயரமான கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. செம்மலை, கள்ளப்பாடு, அளம்பில், முல்லைத் தீவுநகரை ஒட்டிய பகுதி, உடப்புக்குளம் ஆகிய இடங்கள் கடல் நீரால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ஊருக்குள் புகுந்த கடல் நீர் இன்னமும் வற்றவில்லை. அதேவேளையில், இச்சம்பவத்தால் எந்தவித உயிருடற்சேதமும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

0 கருத்துரைகள்:
Post a Comment