வளர்ச்சியடைந்த உலகின் முதல் பத்து நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லண்டனில் இயங்கி வரும் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஆய்வு மையம் வெளியிட்ட உலகின் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இதில், இதுவரை ஆறாவது இடத்தில் இருந்த பிரிட்டனை பிரேசில் பின்னுக்குத் தள்ளிவிட்டது. மேலும் தற்போது பொருளாதார வளர்ச்சியில் பத்தாவது இடத்தில் உள்ள இந்தியா எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு 5-வது இடத்தைப் பிடிக்கும் என்றும் பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யூரோ மண்டல பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட்டால், அம்மண்டலப் பொருளாதாரம், 0.6 சதவீதம் மட்டுமே சுருங்கும் என்றும், அப்பிரச்சனை தீராவிட்டால், பொருளாதாரச் சுருக்கம், 2 சதவீதம் அளவிற்கு இருக்கலாம் எனவும் அந்த மையம் கூறியுள்ளது. இதனிடையே, வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைந்து கொண்டே செல்லும் என்றும், ஆசிய நாடுகளின் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் தெரிய வருவதாக, மையத்தின் தலைவர் டக்ளஸ் மெக் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment