சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.
விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளரான கருணா கோஷ்டியினர் அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதில் ஜீவா, சங்கீதா, கிரிஷ் ஆகிய மூவரும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜீவா தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து ஜீவா கூறுகையில், சங்கீதாவையும், கிரிஷையும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சங்கம் கவுரவிக்க இருப்பதாகவும், அதில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அழைத்தார்கள்.
அதோடு அங்கு நடைபெறும் புத்தாண்டு விழாவிலும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நான் புத்தாண்டை மனைவியுடன் வெளிநாடு சென்று கொண்டாடுவது வழக்கம். அதனால், சுவிட்சர்லாந்து செல்ல சம்மதித்து இருந்தேன். இந்த நிலையில் அந்த விழா சர்ச்சையாகி இருக்கிறது. தமிழர்கள் மனதை புண்படுத்தும் விழாவில் நான் கலந்துகொள்ள மாட்டேன். சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டேன் என்று கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment