வடகொரியாவின் தலைநகர் பியொங்யாங்கில் பெருமளவு மக்கள் முன்பாக கிம் யாங் இல் அவர்களின் இளைய மகன் நாட்டின் அதியுயர் தலைவராக பிரகடனம் செய்யயப்பட்டார்.தனது தந்தையின் நினைவு ஆராதனைக்கு தலைமையேற்ற கிம் யாங் உன் அவர்களுக்கு இராணுவ மற்றும் கட்சியின் உயர் தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
லட்சக்கணக்கான மக்கள் முன்பாக அவரைப் போற்றும் பிரகடனம் படிக்கப்பட்டது. அப்போது மைய சதுக்கத்தில் மக்கள் எல்லாம் தலை சாய்த்து வணக்கம் செலுத்தினார்கள்.
தேசம், இராணுவம் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய அதியுயர் தலைவராக கிம் யாங் உன் போற்றப்பட்டார்.
தனது தந்தையைப் போன்ற கொள்கை மற்றும் குணாதிசயங்களை கொண்டவர் அவர் என்று விவரிக்கப்பட்டார்.
இன்னும் முப்பது வயதுகூட நிரம்பாதவர் கிம் யாங் உன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகத்தான் இப்படி ஒருவர் இருப்பதே அந்நாட்டு மக்களுக்குத் தெரியும்.
நாட்டின் அதியுயர் தலைவர் பதவியில் கிம் யாங் உன் இருந்தாலும் அவரது அதிகாரம் மிக்க மாமாவான ஜங் சொங் தேக் தான் உண்மையான அதிகார மையமாக விளங்குவார் என்று சில விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment