மும்பையில் கட்டியுள்ள புதிய பங்களாவை ரூ.100 கோடிக்கு சச்சின் டெண்டுல்கர் இன்சூரன்ஸ் செய்துள்ளார். மும்பையில் உள்ள பாந்தராவில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 6 ஆயிரம் சதுர அடியில் ஆடம்பர பங்களா கட்டி, கடந்த செப்டம்பரில் குடியேறினார்.
இந்த பங்களாவை அவர் ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார். தனிநபர் ஒருவர் தனது வீட்டை இவ்வளவு பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்வது அரிதான ஒன்று. ஒரு சிலரே இதுபோல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நியூ இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய அரசு நிறுவனங்களும், ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து கூட்டாக இந்த இன்சூரன்சை ஏற்றுள்ளன. இதில், ரூ.75 கோடி தீ விபத்துக்கான இன்சூரன்ஸ். தீ விபத்து, தீவிரவாத தாக்குதல் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகள் போன்றவற்றால் பங்களாவுக்கு பாதிப்பு, சேதம் ஏற்பட்டால் இந்த தொகை வழங்கப்படும். திருடு நடந்தாலும் இந்த இன்சூரன்ஸ் தரப்படும்.
மீதியுள்ள ரூ.25 கோடி, வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக் பொருட்கள், கிரிக்கெட் சாதனங்கள், பர்னிச்சர்கள் போன்றவற்றுக்காக செய்யப்பட்டுள்ளது. இந்த ரூ.100 கோடி இன்சூரன்சுக்காக டெண்டுல்கர் ஆண்டுக்கு ரூ.40 லட்சம் பிரமியம் தொகை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment