Home » » யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி குணமடைந்தது.

யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி குணமடைந்தது.

Written By edupudi on Dec 7, 2011 | 5:29 PM

இன்னும் மூன்று வாரங்களில் யுவராஜ் குணமடைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்பார்’ என அவருடைய தாயார் ஷப்னம் சிங் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து ஷப்னம் சிங் கூறியதாவது..
புதிய யுவராஜ் சிங்கை உலகம் பார்க்கப்போகிறது. இன்னும் 2 முதல் 3 வாரங்களில் முழுமையாக குணமடைந்து போட்டிகளில் விளையாடுவார். உடல் நலம் சரியில்லாத இந்த சமயத்தில் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டான்.
கடந்த ஆறு மாதங்களாக நுரையீரல் கட்டி பாதிப்பினால் அவதிப்பட்டான். இது அவனுக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது இது மிகவும்ஆபத்தானது என்று அறிந்திருந்த போதும் தனது சோகத்தை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை.
தனக்கு இப்படி நேர்ந்ததை ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினான். நன்கு குணமடைந்த பின் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தலாம் என்றிருந்தான். ஆனால் மேற்கிந்திய தொடரைப் புறக்கணித்ததற்காக இக்காரணத்தைக் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger