Home » » கர்ப்பம் தரிப்பதற்கான மாத்திரைகள்

கர்ப்பம் தரிப்பதற்கான மாத்திரைகள்

Written By edupudi on Dec 16, 2011 | 7:53 PM

இன்றைய அவசர யுகத்தில் உணவை உற்பத்தி செய்வதிலிருந்து உண்பது வரை எதிலும் அவசரம், வேகம்...!சத்தில்லாத
உணவு...அமைதியற்ற வாழ்க்கை போன்றவற்றினால் மனிதர்களுக்கு ஏற்படுகிற பல்வேறு பிரச்னைகளில் பெண்கள் கர்ப்பம் அடைவதில் சந்திக்கும் சிரமமும் ஒன்று!


பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டென்றாலும், போதுமான வைட்டமின்கள் உடலுக்கு கிடைக்காமல் இருப்பதும் கர்ப்பம் தரிக்காமல்
இருப்பதற்கு முக்கிய காரணம் என்றும், நல்ல ஊட்டச்சத்தான வைட்டமின் நிறைந்த உணவுகளை உண்டு வந்தால், அது பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

வைட்டமின் நிறைந்த உணவுகள் அல்லது வைட்டமின் மாத்திரை போன்றவை பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. 

அதுமட்டுமல்லாது பெண்கள் தாங்கள் தானாகவே கர்ப்பமடைய ஃபோலிக் அமிலம் மாத்திரைகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கர்ப்பமடைய எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட, வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதினால் விரைவாக கர்ப்பமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 

கர்ப்பமடைய குறைவான வாய்ப்புடைய 58 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வைட்டமின் மாத்திரைகளும், மற்றொரு குழுவுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. 

கூடவே உணவு டைரியில் குறிப்பிட்டுள்ளபடி ஆரோக்கியமான, சமச்சீரான உணவுகளும் அவர்கள் அனைவருக்கும் அளிக்கப்பட்டன. 

ஆய்வின் தொடக்கத்தில் இந்த இரண்டு குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கும் கர்ப்பத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாதவிலக்கு சுழற்சி சீரான முறையில் இல்லாமல் இருந்தது.

ஆய்வின் முடிவில் தினமும் வைட்டமின்கள் வழங்கப்பட்ட பெண்களில் 60 விழுக்காட்டினர், அதாவது 30 பேரில் 18 பேர், கர்ப்பம் தரித்தனர்.அதே சமயம் ஃபோலிக் அமிலம் கொடுக்கப்பட்ட பெண்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே கர்ப்பம் தரித்தனர். 

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் அனைவருமே வயது,உடல் எடை போன்றவற்றில் ஏறக்குறைய சமமானவர்களாகவே இருந்தனர்.அதேப்போன்று மது அருந்தும் மற்றும் புகைக்கும் பெண்களும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை.

ஃபோலிக் அமிலம் கர்ப்பம் தரிப்பதற்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும், அதைக்காட்டிலும் வைட்டமின் எடுத்துக்கொண்டவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதும், பக்கவிளைவுகள் இல்லாமல் இருப்பதும் இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை ஏற்ற டாக்டர் அகர்வால்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger