"உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிப்பேன்,'' என,
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. முதல் டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் தேர்வு விரைவில் நடக்கவுள்ளது.
ஜான்சன், கம்மின்ஸ் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார்கள். இதனால் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் போலிஞ்சருக்கு, சுமார் ஒரு ஆண்டுக்கு பின் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். கடைசியாக இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடிலெய்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடினார். இதுவரை இவர், 12 டெஸ்ட் (50 விக்.,), 39 ஒருநாள் (62 விக்.,), இரண்டு சர்வதேச "டுவென்டி-20' (2 விக்.,) போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து போலிஞ்சர் கூறுகையில், ""இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இதில் இடம் பிடிக்க, அடுத்து வரவுள்ள "பிக் பாஷ் டுவென்டி-20' தொடரில் முழுத்திறமையை வெளிப்படுத்தி, அணித் தேர்வாளர்களை என் மீது திசை திருப்ப வேண்டும். தற்போது முழு உடற்தகுதியுடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், அணியின் வெற்றிக்கு நிச்சயம் கைகொடுப்பேன்,'' என்றார்


0 கருத்துரைகள்:
Post a Comment