Home » » விக்ரம் ஒரு மிகப்பெரிய கலைஞன்

விக்ரம் ஒரு மிகப்பெரிய கலைஞன்

Written By edupudi on Dec 23, 2011 | 8:52 AM

நான் பார்த்த நடிகர்களிலேயே மிகவும் அற்புதமான நடிகர் விக்ரம் தான் என கூறியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.
யதார்த்தமான படங்களை கொடுத்து சில படங்களிலேயே தனக்கென ஒரு பெயரை தக்க வைத்து கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன்.

இவர் இப்போது நடிகர் விக்ரமை வைத்து ராஜபாட்டை என்ற படத்தை எடுத்துள்ளார். இன்னும் சில தினங்களில் இப்படம் வெளியாக உள்ளது.
விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை சுசீந்திரன் நம்மிடம் கூறுகையில் நான் பல நடிகர்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் நான் எதிர்பார்க்கும் விஷயத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய அற்புதமான ஒரே நடிகர் விக்ரம் மட்டும் தான்.
படத்தின் காட்சிகளை நான் அவரிடம் கூறும்போது அதை அப்படியே உள்வாங்கி கொண்டு ஒரே டேக்கில் நடித்து கொடுத்துவிடுவார். அவரிடம் நான் ஆச்சரியப்பட்ட இன்னொரு விஷயம் ஒரு காட்சியின் வசனத்தை பேசும் போது பலவிதமான குரலில் பேசி அமர்க்களப்படுத்துவார்.
அப்போது தான் விக்ரம் ஒரு மிகப்பெரிய கலைஞன் என்பதை உணர்ந்தேன். இப்படி ஒரு நடிகருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தால் அது மிகப்பெரிய பாக்கியம்.
மீண்டும் விக்ரமும், நானும் இன்னொரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம். அதுபற்றிய அறிவிப்போடு விரைவில் சந்திப்போம் என்று கூறினார்.
நில ஆக்கிரமிப்பு பிரச்சனையை மையப்படுத்தி ராஜபாட்டை படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் இப்படம் பொழுது போக்கு திரைப்படம்.

source tamilpoonga
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger