மனைவிக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்காத கணவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ரூ.6.65 லட்சம்(இந்திய ரூபாய் மதிப்புபடி) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.பிரான்சின் நைஸ் நகரை சேர்ந்த ஜோடிக்கு 1986ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு பிறந்த 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2009ம் ஆண்டு விவாகரத்து பெற்று மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் முன்னாள் கணவர் மீது நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார்.
அதில் கணவன்- மனைவி என்ற போதிலும் நீண்ட காலமாக என்னுடன் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நீண்ட நேர வேலை மற்றும் உடல்நல பிரச்னைகள் காரணமாக மனைவியுடன் மகிழச்சியாக வாழ முடியவில்லை என்று விசாரணையின் போது கணவர் தெரிவித்தார். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது.
எனவே அவருக்கு ரூ. 6.65 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும் திருமணமான தம்பதியர் பரஸ்பர உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வது அவர்களது கடமை.
அதில் பிரச்னைகள் ஏற்பட்டால் இருவரும் பேசி சுமூக தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து ஒருவரின் உணர்வுக்கு மதிப்பளிக்காததை ஏற்க முடியாது என நீதிபதிகள் தீர்பளித்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment