Home » » 25 வருடங்களாக வயிற்றுனுள் இருந்த பேனா

25 வருடங்களாக வயிற்றுனுள் இருந்த பேனா

Written By edupudi on Dec 23, 2011 | 9:31 AM


75 வயதான பெண் ஒருவரின் வயிற்றில் 25 வருடங்கள் இருந்து வந்த பேனாவை மருத்துவர்கள் ஆபரேசன் மூலம் அகற்றியுள்ளனர்.
இந்நிகழ்வை மருத்துவ உலகினர் அதிசயமாக கூறி வியக்கின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த 1986 ஆம் ஆண்டு டான்சில் பிரச்சினைக்காக தொண்டையில் ஆபரேசன் செய்தது தவிர அவர் வேறு எதற்காகவும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு வயிற்று வலி அதிகரிக்கவே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது வயிற்றில் ஏதோ கம்பி போன்ற பொருள் இருப்பது தெரிய வந்தது. உடனே டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அந்தப் பொருளை வெளியே எடுத்தனர். அப்போதுதான் அது பேனா என்று தெரியவந்தது.

25 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த அந்தப் பேனாவால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது டாக்டர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பேனா எப்படி வயிற்றுக்குள் சென்றது என்று அந்த பெண்மணிக்கு நினைவு இல்லை. இருந்தாலும் வயிற்றில் இருந்த ஒரு பாரம் குறைந்து, உயிர் பிழைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் 76 வயதான அந்த பெண்மணி.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger