இது இவ்விதமிருக்க நேற்று முன்தினம் வெளியான அறிக்கையொன்று டென்மார்க்கில் அதிகமாக இருக்கும் வெளிநாட்டவர் துருக்கியரே என்று தெரிவிக்கிறது. டென்மார்க்கின் மொத்த சனத்தொகையில் துருக்கியர்கள் 1.1 வீதம் இடம் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்கள். அதேவேளை மேலை நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர் சென்ற ஆண்;டு மட்டும் 32.000 பேர் வந்துள்ளதாகவும், 2010 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் இது 1600 பேர் அதிகமாகும். அதேவேளை மேலை நாடுகள் அல்லாதவர்களின் தொகை சென்ற ஆண்டு 16.500 பேர் வீழ்ச்சி கண்டுள்ளது.
மறுபுறம் வெளிநாட்டு பின்னணி கொண்ட சிறுபிள்ளைகளை டென்மார்க் வரவழைப்பதற்கு இருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட புதிய சட்ட மூலத்தில் ஆறு வயதாக இருந்த கட்டுப்பாடு எட்டு வயதாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு என்கில்ஸ் லிஸ்ற், லிபரல் அலையன்ச இதில் கையொப்பமிட்டுள்ளன. எட்டு வயதுவரை பிள்ளைகள் இணைவாக்கமடையும் வேகம் விரைவாக இருக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஆகவே ஆறு வயதிற்கு பின் பிள்ளைகளால் இணைவாக்கமடைய முடியுமா என்று ஆராயும் அரசு இனி எட்டு வயதுக்கு பின்னரே ஆராயும்.
0 கருத்துரைகள்:
Post a Comment